தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலங்கை அரசிற்கு சார்பு நிலையில்

Report Print Sujitha Sri in அரசியல்

அரசாங்கம் சொல்வதையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முன்வைப்பதாக சட்டத்தரணியும், மனித உரிமைகள் ஆர்வலருமான சுகாஸ் தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைப் பேரவையின் 36 ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் நடைபெற்று வருகிறது.

இந்த கூட்டத்தொடரானது இலங்கை விவகாரம் தொடர்பில் எந்தளவிற்கு முக்கியத்தும் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது என அவரிடம் வினவிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

பெரும்பாலான நாடுகள் நல்லாட்சி எனக் கூறப்படும் மைத்திரி - ரணில் அரசிற்கு சார்பான போக்கையே கடைபிடித்து வருகின்றன.

அதிலும் குறிப்பாக தமிழ் மக்களுடைய தலைமைகள் எனக் கூறிக்கொள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இலங்கை அரசின் நிலைப்பாட்டிற்கு சார்பாகவே செயற்படுகிறது.

அத்துடன், அரசாங்கம் சொல்வதையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முன்வைக்கிறது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.