சிவராம் கொலை விவகாரம்: முதலமைச்சர் சீ.வியின் முடிவு சரியானதா?

Report Print Sujitha Sri in அரசியல்

சிரேஸ்ட ஊடகவியலாளர் சிவராம் படுகொலையுடன் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என வட மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைப் பேரவையின் 36ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ள நிலையில் எமது செய்தி சேவைக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

சிரேஸ்ட ஊடகவியலாளரான சிவராம் இல்லையெனில் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இல்லை. இந்த நிலையில் சிவராம் படுகொலையுடன் தொடர்பான வழக்கு கிடப்பில் போடப்பட்டுள்ளது.

எனினும் குறித்த படுகொலையுடன் தொடர்புடையவர் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தி அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.