இலங்கை மதச்சார்பற்ற நாடாக மாற்றப்படுவதற்கு பழனி திகாம்பரம் எதிர்ப்பு

Report Print Aasim in அரசியல்

இலங்கை மதச்சார்பற்ற நாடாக மாற்றப்பட வேண்டுமென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுக்கும் கோரிக்கையை தான் வன்மையாக எதிர்ப்பதாக அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகம் ஒன்றுக்கு நேற்றைய தினம் வழங்கியுள்ள நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வௌியிட்டுள்ள அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஒரே இலங்கைக்குள் அதிகாரப் பரவலாக்கலை கோருவது நியாயமான கோரிக்கையாகும்.

அரசியலமைப்பின் பிரகாரம் ஒரே இலங்கைக்குள் அதிகாரப் பரவலாக்கல் மேற்கொள்ளப்படுவதில் தவறில்லை என்பதன் காரணமாக அதனை ஏற்றுக் கொள்ள நாங்களும் தயார்.

அது தற்போதைய நிலையில் புத்திசாலித்தனமான நடவடிக்கையாகவும் கருதலாம்.

ஆனால் இலங்கையை மதச்சார்பற்ற நாடாக மாற்றவும், வடக்கு கிழக்கை ஒன்றிணைக்கவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வலியுறுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அதனை நான் வன்மையாக எதிர்க்கின்றேன் என்றும் அமைச்சர் திகாம்பரம் தெரிவித்துள்ளார்.