நாடாளுமன்றத்துக்கு அச்சுறுத்தல்! ஜீ.எல்.பீரிஸ்

Report Print Sinan in அரசியல்

மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவு கிடைத்திருக்காவிட்டால் அன்று தேர்தலில் வெற்றி பெற்றிருக்க முடியாமல் போயிருக்கும் என முன்னாள் அமைச்சரும் பேராசிரியருமான ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் இதை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

இந்த அரசு மாகாண சபைத் தேர்தலை நடத்த தாமதிப்பதாகவும், இதனால் நாடாளுமன்றத்திற்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை சட்டமா அதிபருக்கு எதிராக கூட்டு எதிரணி நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.