ஜீவன் தொண்டமான் எப்போது அரசியலுக்கு வரவேண்டுமோ அப்போது வருவார்!

Report Print Thirumal Thirumal in அரசியல்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மக்களின் சக்தியையும், பலத்தையும் கொண்டு செயல்படுகின்றது என மத்திய மாகாண சபை அமைச்சர் ரமேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

அட்டன் லெதண்டி கலனிவத்தை தோட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு நவக்கிரக சிலைகள் வழங்கும் வைபவம் இன்று இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

தேர்தல் காலங்களில் எமது மக்கள் மத்தியில் ஒற்றுமை இல்லாமல் போய்விடும். நாம் எதிர்பார்க்கும் திட்டங்கள் உரிய நேரத்தில் இடம்பெறுவதில்லை.

எமது தலைவர் சமூக பாதுகாப்பை உறுதி செய்யும் தலைவர். கடந்த இரண்டு வருட காலப்பகுதியில் எவ்வாறு அபிவிருத்தி திட்டங்களில் முன்னேறி சென்றுள்ளோம் என்பதை உணர வேண்டும்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை தேசிய சபையை அமைக்கும். புதிய நிர்வாக சபை அங்கத்தவர்களை நியமிக்கும். இந்த நிகழ்வு கொட்டகலையில் இடம்பெற்றது.

ஆனால் விமர்சனம் செய்பவர்கள் ஒன்றை எதிர்பார்தார்கள். ஆறுமுகன் தொண்டமானின் மகன் ஜீவன் தொண்டமானை கட்சிக்குள் கொண்டுவரவே இந்த தேசிய சபை கூடுவதாக விமர்சனம் செய்தார்கள்.

ஆனால் ஜீவன் தொண்டமான் தேசிய சபை அங்கத்தவர் அல்ல. கட்சியில் இருக்கின்றார். அவர் எப்போது வர வேண்டுமோ, அப்போது வருவார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஜனநாயகத்திற்குரிய தேசிய கட்சியாகும்.

ஆனால் ஏனைய கட்சிகள் மலையகத்தில் அரசியல் செய்ய வேண்டும் என்றால், அவர்கள் கொண்டு வரும் திட்ட நிகழ்வுகளில் சௌமிய மூர்த்தி தொண்டமான், ஆறுமுகன் தொண்டமான் ஆகியோரை விமர்சனம் செய்யாமல் முன்னெடுக்க முடியவில்லை.

இவர்களை விமர்சித்தால் மாத்திரமே மலையகத்தில் அரசியல் செய்ய முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.