புதிய அரசியல் அமைப்பினால் நாடு பிளவடையாது! ருவான் விஜேவர்தன

Report Print Kamel Kamel in அரசியல்

புதிய அரசியல் அமைப்பினால் நாடு பிளவடையாது என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

பியகம பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

கூட்டு எதிர்க்கட்சியினர் எவ்வாறான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தாலும், புதிய அரசியல் அமைப்பு பற்றி அச்சம் கொள்ளத் தேவையில்லை. நாட்டில் பௌத்த மதத்திற்கான முன்னுரிமை இல்லாமல் செய்யப்படாது.

புதிய அரசியல் அமைப்பின் ஊடாக பௌத்த மத்திற்கான முன்னுரிமை இழக்கப்படும் எனவும், நாடு பிளவடையச் செய்யப்படும் என செய்யப்படும் பிரச்சாரங்களில் எவ்வித உண்மையும் கிடையாது.

அரசியல் நோக்கங்களின் அடிப்படையில் இவ்வாறான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என அமைச்சர் தெரிவித்துள்ளார்.