சப்ரகமுவ மாகாணத்தின் ஆட்சி இன்று நள்ளிரவுடன் ஆளுநர் கையில்

Report Print Ajith Ajith in அரசியல்

சப்ரகமுவ மாகாண சபையின் ஆட்சியை கையேற்க உள்ளதாக மாகாண ஆளுநர் மார்ஷல் பெரேரா தெரிவித்துள்ளார்.

சப்ரகமுவ மாகாண சபையின் ஆயுட்காலம் இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வருகிறது.

இதற்கமைய, தேர்தல் நடத்தப்பட்டு மாகாண சபை மீண்டும் அமைக்கப்படும்வரை அதன் ஆட்சிப் பொறுப்பு தம்மால் முன்னெடுக்கப்படும் என்று ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

சப்ரகமுவ மாகாண சபைத் தேர்தல் கடந்த 2012ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8ஆம் திகதி நடத்தப்பட்டது. அதன் முதலாவது அமர்வு செப்டம்பர் 26ஆம் திகதி இடம்பெற்றது.

இதற்கமைய சப்ரகமுவ மாகாண சபையின் 5வருட ஆயுட்காலம் இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வருகிறமை குறிப்பிடத்தக்கது.