நாமல் கைது! ஆவேசத்துடன் ஜப்பானிலிருந்து வருகின்றார் மஹிந்த

Report Print Shalini in அரசியல்

நீதிமன்ற தடை உத்தரவையும் மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமைக்காக நாமல் ராஜபக்ஸ உள்ளிட்ட ஆறுபேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் கேள்வியுற்ற மஹிந்த ராஜபக்ஸ ஜப்பானிலிருந்து அவசர அவசரமாக நாடு திரும்பவுள்ளார்.

தனிப்பட்ட விடயமாக ஜப்பான் சென்றுள்ள மஹிந்த ராஜபக்ஸ நாமலின் கைது விடயத்தை கேள்வியுற்றதும் நாளை வெள்ளிக்கிழமை நாடு திரும்பவுள்ளார்.

இந்த தகவலை மஹிந்த ராஜபக்ஸவின் பிரத்தியோக செயலாளர் உதித் லொக்குபண்டார தெரிவித்துள்ளார்.

மத்தல விமான நிலையத்தை இந்தியாவுக்கு குத்தகைக்கு வழங்குவதனை எதிர்த்து நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி போராட்டம் நடத்திய குற்றச்சாட்டுக்காக நாமல் ராஜபக்ஸ உள்ளிட்ட ஆறு பேர் ஹம்பாந்தோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது, எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையிலேயே ஜனநாயகத்திற்கு ஆதரவாக போராடி, பொலிஸாரால் கைது செய்யப்பட்ட தனது புதல்வனின் விடயம் தொடர்பில் மேலதிக நடவடிக்கைகள் எடுப்பதற்காக மஹிந்த நாடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.