விமலுடனான சந்திப்பு குறித்து ஜனாதிபதி வெளியிட்டு கருத்து

Report Print Shalini in அரசியல்

புதிய அரசியலமைப்பு தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்சவுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பு ஜனாதிபதியின் தமைமையில் நேற்று நடைபெற்றுள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது டுவிட்டர் தளத்தில் ஒரு கருத்தினை பதிவேற்றியுள்ளார்.

“அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் பற்றி தமது கட்சியின் கருத்துக்களை முன்வைக்க விமல் வீரவங்ச வந்தார். தேசிய ஒற்றுமை என்ற விடயத்தையே அனைவரும் முன் மொழிகின்றனர்.” என ஜனாதிபதி பதிவிட்டுள்ளார்.

இதேவேளை, நாட்டை பிளவடையச் செய்யும் அரசியல் அமைப்பு வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரியதாக விமல் வீரவங்ச ஊடகங்களிடம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.