அமைச்சர் மனோ கணேசனை வம்புக்கு இழுக்கும் பசில் ராஜபக்ஸ

Report Print Shalini in அரசியல்

உள்ளூராட்சித் தேர்தல்கள் எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள நிலையில், நுவரெலியா மாவட்டத்தில் புதிய பிரதேசசபைகள் அமைக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் மனோ கணேசன் தற்போது தெரிவிப்பது பொருத்தமற்ற செயற்பாடு என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

தேர்தல் நெருங்கும் போது இவ்வாறான கோரிக்கைகளை முன்வைப்பது அபிவிருத்தியில் பின்னடைவை ஏற்படுத்தும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

271 பிரதேச சபைகள், 41 நகர சபைகள், மற்றும் 23 மாநகர சபைகள் உள்ளிட்ட 335 உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் ஜனவரி மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இது குறித்து கருத்து தெரிவிக்கும் போதே இதை தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மனோ கணேசனின் இந்த செயற்பாட்டால் புதிய பிரதேச சபைகளுக்கு உரிய வளங்கள் கிடைக்காது, ஆகவே தேர்தல முடிந்த பின்பு அதை செய்வதே பொருத்தமாக இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாகவே தேர்தலை காலம் தாழ்த்திய அரசாங்கம் ஜனவரி மாதத்தில் தேர்தலை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளது.

மனோ கணேசனின் இந்த கோரிக்கையை வைத்துக் கொண்டு தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாகவும், ஜனவரி மாதம் நடைபெறவுள்ள தேர்தலை மார்ச் மாதத்திற்கு பிற்போட அரசு முயற்சிப்பதாகவும் பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.