ஐ.தே.கட்சியுடன் கொடுக்கல் வாங்கல் செய்யும் தேவை எமக்கில்லை

Report Print Steephen Steephen in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சியுடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடும் எந்த தேவையும் தமக்கில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கம்பஹா பிரதேசத்தில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சிக்கும் மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையில் தொடர்புகள் இருப்பதாக காண்பிக்க சிலர் முயற்சித்து வருகின்றனர் எனவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே எதிர்வரும் தேர்தலின் போது கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தலா 50 லட்சம் ரூபா பணத்தை கொடுத்து விலை வாங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஹோமாகமை பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.