பிரதமரிடம் உடனடியாக வாக்குமூலம் பெறப்பட வேண்டும்: வாசுதேவ

Report Print Steephen Steephen in அரசியல்

திறைசேரி பிணை முறிப்பத்திர மோசடி சம்பந்தமாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க விளக்கமளிப்பதற்காக மட்டுமல்ல பிரதிவாதியாக ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராக வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

சோசலிச மக்கள் முன்னணி கொழும்பில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

பிணை முறிப்பத்திர விவகாரத்தில் பிரதமருக்கு தொடர்பு இருப்பதாக நான் தொடர்ந்தும் கூறி வந்தேன். தற்போது அது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

பிரதமரை உடனடியாக அழைத்து இது குறித்து வாக்குமூலம் பெற வேண்டும்.

பிணை முறிபத்திர மோசடி தொடர்பாக கோப்குழுவின் அறிக்கைக்கு முரணாக கருத்து வெளியிட்டு பிரதமர் நாடாளுமன்றத்தை தவறாக வழிநடத்தியதாகவும் இது சம்பந்தமாகவும் பிரதமர் நேரடியாக கருத்தை வெளியிட வேண்டும் எனவும் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.

மேலதிக செய்திகள் - ஆகாஷ்