ஜனாதிபதி தமிழ் மக்கள் மீது அதிக நம்பிக்கை கொண்டுள்ளார்: யாழில் துமிந்த திசாநாயக்க

Report Print Shalini in அரசியல்

அங்கஜன் இராமநாதன் ஜனாதிபதியின் நம்பிக்கைக்கு உரியவர் என விவசாயத்துறை அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சார்பாக போட்டியிட இருக்கின்ற வேட்பாளர்களை அறிமும் செய்து வைக்கின்ற நிகழ்வு நா.உ அங்கஜன் இராமநாதன் தலைமையில் யாழில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே துமிந்த திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார், தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஜனாதிபதி மைத்திரி பாலசிறிசேன வடக்கு கிழக்கு தெற்கு என்கின்ற பேதம் இல்லாமல் எல்லா பகுதிகளிலும் வாழ்கின்ற தமிழ் சிங்கள முஸ்லிம் மக்களையும் ஒன்றிணைகின்ற செயற்பாடுகளில் ஈடு பட்டுவருகின்றார்.

ஜனாதிபதி தமிழ் மக்கள் மீது அதிக நம்பிக்கையும் விசுவாசத்தையும் கொண்டிருகின்றார்.

இதேவேளை, நா.உ அங்கஜன் இராமநாதன் உரையாற்றுகின்ற போது,

இன்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பாக இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த கட்டமைப்பு மற்றும் இங்கு கூடியுள்ள இளைஞர் யுவதிகளிள் மற்றும் வேட்பாளர்களின் உத்வேகம் யாழ்.மாவட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வளர்ச்சியினையும் இருப்பினையும் கண்டு அமைச்சர் பிரமித்துபோய் இருப்பது என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இங்கு கூடியிருக்கின்ற இந்த கூட்டம் எனது அரசியல் பாதை சரியானது என்பதை எனக்கு மீண்டும் வலியுறுத்தி கூறுகின்றது. உண்மையானவர்களாகவும் நேர்மையானவர்களாகவும் மக்கள் சேவை மனப்பாங்கு உடையவர்களாகவும் இருந்தால் என்னோடு இணைந்து அரசியலில் பயணிக்கலாம் என்பதை இன்று யாவரும் உணர்ந்திருப்பார் என்றும் கூறினார்.