வவுனியா வைத்தியசாலைக்கு வடமாகாண சுகாதார அமைச்சர் விஜயம்

Report Print Theesan in அரசியல்

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் காணப்படும் குறைப்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடல் இன்றைய தினம்(16) வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றுள்ளது.

சுமார் இரண்டு மணித்தியாலயத்திற்கு மேலாக இடம்பெற்ற இக் கலந்துரையாடலின் போது வைத்தியர்கள் தங்களது பிரதேச வைத்தியசாலையில் காணப்படும் குறைப்பாடுகள் தொடர்பாகவும் தாதிய உத்தியோகத்தர்களின் குறைபாடுகளையும் முன் வைத்துள்ளனர்.

அவர்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து விரைவில் உரிய தீர்மானங்களை பெற்றுக் கொடுப்பதாக வடமாகாண சுகாதார அமைச்சர் கூறியுள்ளார்.

வடக்கு மாகாண சுகாதார அமைச்சர், அமைச்சராக பதவிப்பிரமானம் பெற்ற பின்னர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டமை இதுவே முதற்தடவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

வைத்தியசாலையின் பணிப்பாளர் கு.அகிலேந்திரன் தலமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் குணசீலன் , வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பவானி பசுபதிராஜா , வைத்தியர்கள் , தாதிய உத்தியோகத்தக சங்க உறுப்பினர்கள் , வைத்தியசாலையின் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.