அரசாங்கத்துக்கு எதிராக போராட நாமல் அழைப்பு

Report Print Ajith Ajith in அரசியல்

தமக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நன்றி தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் இடம்பெற்ற சோதனையில் தமக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி என அவர் தமது டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.

தேசிய வளங்களை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராக தொடர்ந்து போராடுவோம் என நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மத்தள விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பில் நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

அதன் பின்னர் அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் இதனைத் தெரிவித்துள்ளார்.