வாக்குறுதிகளை நிறைவேற்றாமையினால் ரணிலை முந்திய மைத்திரி

Report Print Ajith Ajith in அரசியல்

2015 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல்களின்போது வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையின் நாடாளுமன்ற நடவடிக்கைகள் குறித்து கண்காணிக்கும் இணையத்தளமான Manthri.lk இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, நாடாளுமன்றத் தேர்தலில் வழங்கிய வாக்குறுதிகளில் நூற்றுக்கு 45 சதவீதமானவை தொடர்பில் நடவடிக்கை எடுக்கவில்லை என அந்த இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தேர்தலின்போது வழங்கிய வாக்குறுதிகளில் நூற்றுக்கு 50 சதவீதமானவை தொடர்பில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.