பல வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த படகுகள் விடுவிப்பு

Report Print Ajith Ajith in அரசியல்

இலங்கையின் கடற்படையினரால் பிடிக்கப்பட்டு பல வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழக கடற்றொழிலாளர்களின் 6 படகுகள் மீண்டும் கையளிக்கப்பட்டுள்ளன.

இந்திய கடற்படையினரிடம் இந்த படகுகள் கையளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த படகுகள் பழுதடைந்த நிலையில் இருந்த போதும் அவை உரிய வகையில் திருத்தப்பட்டே கையளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுகின்றது.

கடந்த செப்டம்பர் 30ஆம் திகதி முதல் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய கடற்றொழிலாளர்களின் படகுகள் மீண்டும் அவர்களிடமே கையளிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.