ராஜிதவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை விரைவில் விவாதிக்க கோரிக்கை

Report Print Ajith Ajith in அரசியல்

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்னவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 09 ஆம் திகதிக்கு முன்னர் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளுமாறு மகிந்த அணி சபையில் கோரிக்கை விடுத்துள்ளது.

மகிந்த அணி நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன இன்று இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

டிசம்பர் மாதம் 09 ஆம் திகதிக்கு பின்னர் நாடாளுமன்றத்தில் வரவு செலவுத்திட்டம் மீதான விவாதம் இடம்பெறவுள்ளதால் அதற்கு முன்னர் நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள தினமொன்றை வழங்குமாறு சபாநாயகரிடம் அவர் கோரியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து முடிவொன்று எடுக்கப்படும் என சபாநாயகர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.