மற்றுமொரு வழக்கில் சிக்கினார் ரஞ்சன் ராமநாயக்க

Report Print Manju in அரசியல்

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்ச தொடர்பாக பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க கூறிய கருத்துத் தொடர்பாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட சட்டத்தரணிகளான பிரேமினாத் சி தொலவத்த மற்றும் மாபகம விமலரத்ன ஆகியோர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் சட்டத்தரணிகள் இருவரும் விளக்கமளித்திருந்ததுடன், ரஞ்சன் ராமநாயக்க பேசிய வீடியோ ஆதாரத்தையும் இதன்போது வெளியிட்டுள்ளனர்.