ராஜபக்ஷ குடும்பத்திற்குள் குண்டு வைத்த கோத்தபாய! கொழும்பில் கொந்தளிப்பு

Report Print Vethu Vethu in அரசியல்

சமகாலத்தில் இடம்பெறும் நிகழ்வுகளினால் ராஜபக்ஷ குடும்பத்திற்குள் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் வியத்மக அமைப்பின் மூலம், ராஜபக்ஷர்களின் அரசியல் பிரவேசம் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கோத்தபாய தலைமையிலான வியத்மக அமைப்பின் பிரதானியான ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணவர்தனவினால் வெளியிட்ட கருத்து பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 21ஆம் திகதி கம்பஹாவில் கோத்தபாய தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன கருத்து வெளியிட்டார்.

அதில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு ஆதரவாக இருப்போர் துரோகிகள் எனவும், அவர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள். அவர்களுக்கு கௌரவமான இறுதிச்சடங்கிற்கு இடமளிக்கக் கூடாது. இந்தப் புதிய அரசியலமைப்பை கொண்டு வருவோர், அதற்கு ஆதரவு வழங்குவோர் நாட்டுக்குத் துரோகம் இழைத்தவர்களாவர் எனவும் கமல் குணரத்ன தெரிவித்திருந்தார்.

இந்த கருத்தானது மஹிந்த குடும்பத்திற்குள் அப்பால் கூட்டு எதிர்கட்சிக்குள் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

பசில் ராஜபக்சவினால் மேற்கொள்ளப்பட்ட பொதுஜன பெரமுன கட்சியின் வெற்றிகரமான பிரச்சாரத்திற்கு இது பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக அக்கட்சியின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இனவாத கொள்ளைகளை கொண்ட சிலர் அரசியல் தெளிவற்ற கோத்தபாயவை பிழையாக வழி நடத்தி பிரபலமடைய முயற்சிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கமல் குணரத்ன வெளியிட்ட கருத்தினால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகிய இருவரும் கடும் கோபத்தில் உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அத்துடன் கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களும் அந்த கருத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளதுடன், கோத்தபாயவின் வியத்மக அமைப்பிற்கு உதவுவதனை நிறுத்துமாறு மஹிந்தவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை கமல் குணரத்னவின் கருத்துக்கு அரசியல் சார்ந்த பலரும் வன்மையான கண்டணங்களை வெளியிட்டுள்ளனர்.

நாட்டில் வாழும் 62 இலட்சம் மக்கள் சமாதானம், நல்லிணக்கம், அபிவிருத்திக்காக புதிய அரசியல் யாப்பை ஏற்படுத்த வேண்டும் என்று அங்கீகாரம் அளித்துள்ள நிலையில் ஆபத்தான இந்த கருத்து வெளியிடப்பட்டுள்ளதாக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளையும் அபிவிருத்தியின் மூலம் முன்னெடுக்கப்படும் பணிகளையும் இவ்வாறான கூற்றுக்கள் மூலம் நிறுத்தி விட முடியாது என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.