உள்ளூராட்சி சபைத் தேர்தல்: வேட்புமனுத் தாக்கல் 27ஆம் திகதி முதல்

Report Print Rakesh in அரசியல்

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் 27ஆம் திகதிமுதல் வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வதற்கான அறிவிப்பை வெளியிட தேர்தல்கள் ஆணையகம் தீர்மானித்துள்ளது.

அதன்படி மூன்றரை நாட்கள் வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் தினங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. 27, 28, 29ஆம் திகதிகளுடன் 30ஆம் திகதி பிற்பகல்வரை வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கான அனுமதியளிக்கும் வர்த்தமானி அறிப்பை கடந்த முதலாம் திகதி துறைசார் அமைச்சர் பைசர் முஸ்தபா வெளியிட்டிருந்தார்.

அதனையடுத்து கட்சியின் செயலாளர்களுடன் கலந்துரையாடியதற்கு அமைய வேட்புமனுக்களைத் தாக்கல்செய்யும் தினமான மேற்படி திகதிகளைத் தேர்தல்கள் ஆணையகம் தீர்மானித்துள்ளது.

Latest Offers