இலங்கையில் அதிகம் அவமானப்படுத்தப்படுகின்றேன்! வருத்தத்தில் மைத்திரி

Report Print Vethu Vethu in அரசியல்

சமகாலத்தில் பல்வேறுபட்ட தரப்புகளால் தான் அவமரியாதைப் படுத்தப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கவலை வெளியிட்டுள்ளார்.

இணையத்தளம், பேஸ்புக் உட்பட சமூக வளைத்தளங்கள் என்னை மோசமான முறையில் அவமானப்படுத்துவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ஹெலஹார பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இலங்கையில் நானே அதிகளவில் அவமானப்படுகின்றேன். இதன் ஊடாக ஜனநாயக சமூகமொன்றின் சுதந்திரத்தை காண முடிகின்றது.

நான் செய்யும் சில வேலைகள் பிரச்சாரங்கள் இன்றி முன்னெடுக்கப்படுவதனால் மக்கள் மத்தியில் பல்வேறு விமர்சனங்கள் உள்ளது.

சமூக வலைத்தளங்கள் ஊடாக என்னை நிந்திப்பதை உங்களால் காண முடியும். உலகில் முன்னேற்றமடைந்த நாடுகளில் இவ்வாறான விடயங்கள் இடம்பெறாது. இவை முன்னேற்றமடையாத மக்களின் இயல்பாகும்.

எவ்வகையான அவமானங்கள் வந்த போதிலும், நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் எமக்குள்ள பொறுப்புக்களையும் கடமைகளையும் நாம் நிறைவேற்ற வேண்டும்

விமர்சனங்களுக்கு நாம் பயப்பட வேண்டியதில்லை. அவை அனைத்தும் அரசியல்வாதிகளுக்கே சொந்தமானவை. எனினும் இலங்கையில் அதிகமாக அவமதிக்கப்படுவது நான்.

எப்படியிருப்பினும் இது வளர்ச்சியடையாத விழிப்புணர்வற்றவர்களின் செயலாகும். எனினும் எனது நல்லாட்சி கொள்ளைகளுக்கமைய குற்றவாளிகளுக்கு கட்சி, பேதம் பாராமல் தண்டனை வழங்க நடவடிக்கை எடுப்பேன் என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.