மக்களுடைய நலனின் அடிப்படையிலேயே நாட்டின் எதிர்காலம் தீர்மானிக்கப்படும்: ஜனாதிபதி

Report Print Steephen Steephen in அரசியல்

நாட்டில் வாழும் மக்களுடைய நலனின் அடிப்படையிலேயே நாட்டின் எதிர்காலம் தீர்மானிக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சமூக நலனுக்காகவும், சமூகத்தை அலங்கரிக்கவும் வழங்கப்பட்டுள்ள நவீன தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தும் சிலர் அரசாங்கம் பற்றி தவறான பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றனர் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

பொலன்னறுவையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

நாட்டுக்குள் காணப்படும் ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்திற்கு மத்தியில் எவர் எப்படி செயற்பட்டாலும் மக்களுக்காக பொறுப்பேற்ற பணிகளை உரிய முறையில் நிறைவேற்ற தானும் தனது தலைமையிலான அரசாங்கமும் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.