தேர்தலில் மகிந்த தலைமையில் விரிவான கூட்டணி

Report Print Steephen Steephen in அரசியல்

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் விரிவான கூட்டணியாக போட்டியிட கூட்டு எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தலைமையில் இந்த கூட்டணி தேர்தலில் போட்டியிடும் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் கூட்டு எதிர்க்கட்சியும் இணைந்து தேர்தலில் போட்டியிட உள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் குறித்து கருத்து வெளியிடும் போதே பீரிஸ் இதனை கூறியுள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சி தேர்தலில் போட்டியிடும் கட்சி மற்றும் சின்னம் குறித்து இதுவரை இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.