சுரேஷுடன் சம்பந்தன் பேச வேண்டும்: சித்தார்த்தன் கோரிக்கை

Report Print Rakesh in அரசியல்

இன்றைய சூழலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைப்பது தவறானது. அந்த அபிப்பிராயத்தில்தான் நாங்கள் இருக்கின்றோம். கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஈ.பி.ஆர்.எல்.எவ்வுடன் பேசி அவர்களை இணைத்துச் செல்வது தமிழ் இனத்துக்கு நல்லது என புளொட்டின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் தெரிவித்தார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிடப்போவதில்லை என்று ஈ.பி.ஆர்.எல்.எவ். அறிவித்துள்ளமை தொடர்பில் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் அவ்வாறுதெரிவித்தமை அவரது சொந்த விருப்பம்.

இன்றைய நிலையில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு பிரிந்து செல்லாமல் இருப்பது நல்லது.

எங்களுக்கும் தமிழரசுக்கட்சியுடன் பல பிரச்சினைகள் இருக்கின்றன. ஆனாலும், நாங்கள் ஒன்றாக கூட்டமைப்பாக நிற்கின்றோம்.

இப்போதைய சூழலில் நாம் ஒற்றுமையாக நிற்க வேண்டியது காலத்தின் தேவை.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியுடன்பேசி அவர்களையும் கூட்டமைப்புடன் ஒன்றிணைத்துச் செல்வது, தமிழ் இனத்திற்கு நல்லது என்றார்.