16 வருடங்களுக்குப் பின் உடைகின்றதா கூட்டமைப்பு?

Report Print Rakesh in அரசியல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு 16 வருடங்களுக்குப் பின்னர் அது உடைய ஆரம்பித்திருக்கின்றது.

கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் 4 கட்சிகளில் ஒன்றான ஈ.பி.ஆர்.எல்.எவ். தனிவழி போக முடிவு செய்ததை அடுத்து எதிர்வரும் ஜனவரி மாதம் நடக்க இருக்கும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் எஞ்சிய மூன்று கட்சிகளும் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தின் கீழ் போட்டியிட முடிவு செய்துள்ளன.

எனினும் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிடப்போவதில்லை என்று ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையே நேற்று சந்திப்பு ஒன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்திலும் ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சி கலந்துகொண்டிருக்கவில்லை.

இதையடுத்து எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மூன்று கட்சிகளாகச் சேர்ந்து எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2001ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதி உருவாக்கப்பட்டது.

அப்போது தமிழரசுக் கட்சி, ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகியன கூட்டமைப்பில் இணைந்திருந்தன.

இடையில் தமிழர் விடுதலைக் கூட்டணி வெளியேற அந்த இடத்திற்கு புளொட் அமைப்பு இணைந்தது, இந்த நிலையில் இப்போது ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியும் பிரியும் நிலை தோன்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.