இரட்டைக் குடியுரிமை சம்பந்தமாக சகலருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்

Report Print Steephen Steephen in அரசியல்

இரட்டைக் குடியுரிமை கொண்டிருந்த முன்னாள் அமைச்சர்களுக்கு அரசாங்கம் வழங்கிய கொடுப்பனவுகள் உட்பட வழங்கப்பட்ட அனைத்து வரப்பிரசாதங்களையும் அரசாங்கம் மீண்டும் அறவிட வேண்டும் என ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார்.

பண்டாரவளையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இரட்டைக் குடியுரிமையுடன் அரசாங்கத்துடன் சம்பந்தப்பட்ட சகலருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமிந்த விஜேசிறி குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோர் இரட்டைக் குடியுரிமையை கொண்டுள்ளனர்.

இவர்களை தவிர அரச அதிகாரிகளாகவும் வெளிநாடுகளில் தூதுவர்களாகவும் பணியாற்றியவர்களும் இரட்டைக் குடியுரிமையை கொண்டிருந்தாக கூறப்படுகிறது.