அரசியலமைப்புச் சட்டத்தை நிறைவேற்ற அரசாங்கம் பல வழிமுறைகளை கையாள்கிறது: விமல்

Report Print Steephen Steephen in அரசியல்

புதிய அரசியலமைப்புச் சட்டத்தை நிறைவேற்றிக்கொள்ள அரசாங்கம் பல்வேறு வழிமுறைகளை கையாண்டு வருவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

எனினும் நாடாளுமன்றத்தில் புதிய அரசியலமைப்புச் சட்டத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் கிடைப்பதை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் அரசாங்கம் உத்தேச புதிய அரசியலமைப்புச் சட்டம் தொடர்பில் காணப்படும் உண்மை மற்றும் பொய்யான நிலைமையை மறைக்க பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகிறது எனவும் விமல் வீரவங்ச குறிப்பிட்டுள்ளார்.

ஹம்பாந்தோட்டையில் அண்மையில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்டு அங்குனுகொலபெலஸ்ஸ சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை சந்தித்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.