குட்டித் தேர்தலுக்காக அநுராதபுரத்தில் கூட்டணியுடன் களத்தில் குதிக்கும் மகிந்த

Report Print Ajith Ajith in அரசியல்

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச தலைமையில் அநுராதபுரத்தில் முதலாவது மக்கள் சந்திப்பை பொது எதிர்க்கட்சி நடத்தவுள்ளது.

அநுராதபுரம் சல்ஹாது மைதானத்தில் இந்தப் பொதுக்கூட்டத்தை நடத்த பொது எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன உள்ளிட்ட ஒன்றிணைந்த எதிர்க்கட்சியிலுள்ள கட்சிகளின் தலைவர்கள் இதில் பங்கேற்க உள்ளனர்.

இந்த கூட்டத்தில் பொது எதிரணியை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.