இலங்கையில் இடம்தேடும் நியூசிலாந்து!

Report Print Murali Murali in அரசியல்
209Shares

இலங்கையில், தூதரகம் ஒன்றை அமைப்பதற்கு பொருத்தமான இடத்தை, நியூசிலாந்து அரசாங்கம் தேடி வருவதாக இந்தியாவுக்கான நியூசிலாந்து தூதுவர் ஜொவன்னா கெம்கேர்ஸ் தெரிவித்துள்ளார்.

இதன்படி, 2018ஆம் அல்லது 2019ஆம் ஆண்டு காலப்பகுதியில் கொழும்பில் தூதரகத்தை திறக்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

புதுடில்லியில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இலங்கையில், 44 நாடுகளின் தூதுரகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 89 நாடுகள் புதுடில்லியில் உள்ள தமது நாட்டின் தூதுரகம் ஊடாக இலங்கையுடனான உறவுகளை பேணி வருகின்றது.

இந்நிலையில், புது டில்லியில் உள்ள தூதரகம் மூலம், இலங்கையுடனான உறவுகளை கொண்டுள்ள நியூசிலாந்து கொழும்பில் தூதுரகத்தை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் 22ஆம் திகதி வெகுவிரைவில் கொழும்பில் தூதுரகத்தை திறக்கவுள்ளதாக நியூசிலாந்து நாட்டு வெளிவிவகார அமைச்சர் தெரிவித்திருந்த நிலையில், தற்போது தூதரகத்தை அமைப்பதற்கான இடத்தை தேடி வருவதாக ஜொவன்னா கெம்கேர்ஸ் தெரிவித்துள்ளார்.