மஹிந்தவின் கூட்டத்திற்கு சென்ற 7 பேர் வைத்தியசாலையில் அனுமதி

Report Print Vethu Vethu in அரசியல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி நேற்றைய தினம் நடைபெற்றது.

அனுராதபுரம் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற பேரணியில் கலந்து கொண்டவர்களில் 7 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கூட்ட நெரிசலில் சிக்கியமையினால் காயமடைந்தவர்களே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பலர் மைதானத்திற்கு நுழைய முடியாமல் மைதானத்தில் வெளியே நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.