‘பியர் குடித்துக்கொண்டு காரை ஓட்டிச்செல்லுங்கள்’ அரசாங்கமே கூறிவிட்டது: வாசுதேவ

Report Print Shalini in அரசியல்

அரிசி, தேங்காய், மீன் மற்றும் மரக்கறி போன்றவற்றின் விலை குறைப்பையே மக்கள் கோரினார்கள். ஆனால் 2018ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தில் இந்த விடயங்கள் உள்ளடக்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைக்க வேண்டும் என்றே மக்கள் கோரினார்கள். ஆனால் அரசாங்கம் என்ன கொடுத்துள்ளது?

பியர் ஒன்றை குடித்துக்கொண்டு சிறிய காரை ஓட்டிச்செல்லுங்கள் என்றே கூறப்பட்டுள்ளது. சிறிய கார்களின் விலைகளை குறைத்ததுமட்டுமல்லாமல், பியர்களின் விலைகளையும் குறைத்துள்ளது இந்த அரசு.

ஆகவே இந்த அரசாங்கம் மக்களுக்கு எதிரான ஒரு வரவுசெலவுத்திட்டத்தையே முன்வைத்துள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார்.