சமூக பொருளாதார பிரச்சினைகள் இருக்கும் நாட்டில்தான் யுத்தங்கள் ஏற்படும்

Report Print Steephen Steephen in அரசியல்

1983 ஆம் ஆண்டுக்கு முன்னரும் இலங்கை பொருளாதாரத்தில் வேகமாக வளர்ச்சியடைந்த நாடாக இருக்கவில்லை எனவும் பாரிய சமூக பொருளாதார பிரச்சினைகள் அப்போதும் காணப்பட்டதாகவும் மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.

சமூக, பொருளாதார பிரச்சினைகள் இருக்கும் நாட்டில் தான் போர்கள் ஏற்படும். கடந்த 2009 ஆம் ஆண்டு வரை போர் செலவு காரணமாகவே பொருட்களின் விலைகள் அதிகரிப்பதாகவும் வரி அறவிடுவதாகவும் வீதிகளை நிர்மாணிக்க முடியாது இருப்பதாகவும் பாடசாலைகளுக்கு நிதியை வழங்க முடியாது எனவும் சுகாதாரத்திற்கு நிதியை வழங்க முடியாது எனவும் கூறினார்கள்.

யுத்தம் முடிவடைந்து தற்போது 8 வருடங்கள் கடந்துள்ளது. யுத்தம் காரணம் காட்டி கூறப்பட்டவை அல்ல என்பது தற்போது உறுதியாகியுள்ளது.அரசாங்கம் அரசியல் மாற்றம் குறித்து பேசி விட்டு பழைய பாதையில் செல்வது போல், பொருளாதார பிரச்சினை குறித்தும் பல கதைகளை கூறுகிறது.

கடந்த 70 ஆண்டுகள் அல்லது கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் சென்ற பாதையிலேயே தற்போதைய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டமும் பயணித்து வருகிறது.

சுற்றுச் சூழல் மேலாக பூசப்பட்டிருந்தாலும் பிரதான விடயங்கள் அனைத்தும் அதே பழைய பாதைதான் எனவும் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டார்.