ஏற்றுமதி வருமானம் 7 வீதத்தினால் அதிகரிப்பு

Report Print Steephen Steephen in அரசியல்

ஏற்றுமதி உற்பத்திகளை அதிக்க வேண்டும் என்பது அரசாங்கத்தின் கைவிட முடியாத பொருளாதார கொள்கையின் ஒரு பகுதி என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில், இதற்கான பாரிய அக்கறையும் தேவையும் வேலைத்திட்டமும் அரசாங்கத்திடம் இருக்கின்றன.

2017 ஆம் ஆண்டை எடுத்துக்கொண்டால், எமது ஏற்றுமதி வருமானம் 7 வீதத்தினால் அதிகரித்துள்ளது. தைத்த ஆடைகளில் இருந்து கிடைக்கும் வருமானம் மூன்று வீதமாக குறைந்தது.

ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை கிடைத்ததும் தைத்த ஆடைகளில் இருந்தும் கிடைக்கும் வருமானத்தை அதிகரித்துக்கொள்ளலாம் என்று எண்ணுகிறேன்.

சுற்றுலாத்துறை மூன்று வீத வளரச்சியை எட்டியுள்ள போதிலும் அது போதுமானதல்ல. இதனை மேலும் முன்னேற்ற வேண்டும்.வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் மூலம் கிடைக்கும் வருமானம் குறைந்துள்ளது.

அடுத்த மூன்று மாதங்களில் அதனை அதிகரித்துக்கொள்ள முடியும் என நினைக்கின்றோம்.

அரசின் வரி வருமானம் 12 சத வீதத்தினால் அதிகரித்துள்ளது எனவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.