தவறு செய்த இராணுவத்தினரை பாதுகாக்க தயாரில்லை என்றே ஜனாதிபதி கூறினார்!

Report Print Steephen Steephen in அரசியல்

யுத்தத்திற்காக செயற்பட்ட படையினரை மாத்திரமே காட்டிக்கொடுக்க தயாரில்லை என ஜனாதிபதி குறிப்பிட்டதாக அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தின் போது, இன்று நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்திருந்தமை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் பல விடயங்களை கூறினார். அவர் கூறிய விடயங்கள் குறித்து கவனம் செலுத்துகிறோம்.

இராணுவத்தை காட்டிக்கொடுக்க போவதில்லை என ஜனாதிபதி கூறியிருந்ததாக சிவசக்தி ஆனந்தன் கூறியிருந்தமை குறித்து நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

யுத்தத்திற்காக செயற்பாடுகளை முன்னெடுத்த படையினரை காட்டிக்கொடுக்க தயாரில்லை என்ற அர்த்தத்தில் மாத்திரமே ஜனாதிபதி அவ்வாறு கூறியிருந்தார்.

அவ்வாறின்றி இராணுவத்தில் தவறுகளை செய்திருந்தால், வேறு சம்பவங்களுடன் சம்பந்தப்பட்டிருந்தால், அவர்களை பாதுகாக்க தயாரில்லை என்றே ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார் என அமைச்சர் அமரவீர கூறியுள்ளார்.