அரசாங்கம் ஒரு பிழை விட்டுள்ளது! ரணிலை விட சம்பந்தனுக்கே முன்னுரிமை: விஜயகலா

Report Print Shalini in அரசியல்

நான் ஐக்கிய தேசியக்கட்சியில் இருந்தாலும், எனது கட்சித் தலைவரை விட சம்பந்தன் ஐயாவையே அதிக கூட்டங்களில் முன்னுரிமை கொடுத்து முதன்மைப்படுத்தி பேசுவதாக இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே இதை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

நான் இருப்பது ஐக்கிய தேசியக் கட்சியில், எனது கட்சியின் தலைவர் இந்த நாட்டின் பிரதமரான ரணில் விக்ரமசிங்க.

இந்த நிலையில் அவரை முதன்மைப்படுத்தாமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரை முதன்மைப்படுத்துவதற்கான காரணம் ஒட்டுமொத்த ஒற்றுமைக்காக என குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் சிறு சிறு கட்சிகள் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் சந்தர்ப்பத்தில், கட்சிகளை உடைத்து வேறு கட்சிகளை உருவாக்குவதாக இருந்தால் இனி நாங்கள் எங்களுடைய கட்சித்தலைவரையே முதன்மைப்படுத்துவோம்.

தற்போது இந்த கட்சிகள் எப்படி முடிவெடுக்கின்றதோ, அதற்கு ஏற்ப விழிப்புணர்வுடன் இருந்து, யாருக்கு வாக்களிக்க வேண்டும் என மக்கள்தான் முடிவெடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அரசாங்கம் ஒரு பிழை விட்டுள்ளது என இதன்போது இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதாவது, தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகளை வவுனியாவிலிருந்து அநுராதபுரத்திற்கு மாற்றியது முற்று முழுதான பிழை, இதை மன்னிக்கவும் முடியாது, ஏற்றுக்கொள்ளவும் முடியாது எனவும் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.