2020ஆம் ஆண்டளவில் 2500 எழுச்சிக் கிராமங்கள்

Report Print Nivetha in அரசியல்

2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மக்கள் நலனையும், அபிவிருத்தியையும் இலக்காகக் கொண்டது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அலரிமாளிகையில் நேற்றைய தினம் நடைபெற்ற காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இளைஞர்களுக்கு தொழில்வாய்ப்பை வழங்குவதும் முக்கிய நோக்கமாகும் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் சஜித் பிரேமதாச, வீடமைப்பு அபிவிருத்திக்காக வரவு செலவுத் திட்டத்தின் மூலம் பெருந்தொகை பணம் ஒதுக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

2020ஆம் ஆண்டளவில் 2500 எழுச்சிக் கிராமங்களை உருவாக்குவது அரசாங்கத்தின் இலக்காகும்.

வீட்டுப் பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்க கடந்த அரசாங்கத்தால் முடியாமல் போனதாகவும் அமைச்சர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.