உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் கூட்டு எதிர்க்கட்சி தனித்துப் போட்டியிடத் தீர்மானம்

Report Print Kamel Kamel in அரசியல்

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் கூட்டு எதிர்க்கட்சி தனித்து போட்டியிடத் தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து விலகி விரிவான ஓர் கூட்டமைப்பினை உருவாக்கி அதன் ஊடாக போட்டியிடத் தீர்மானித்துள்ளது.

இதேவேளை, தேசிய அரசாங்கத்திலிருந்து விலகினால் இணைந்து போட்டியிடுவது குறித்து கவனம் செலுத்த முடியும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு கூட்டு எதிர்க்கட்சி விடுத்த நிபந்தனை ஏற்றுக்கொள்ளப்படவில்லை எனவும் இதனால் தனித்து போட்டியிட தீர்மானித்துள்ளதாகவும் கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க கொழும்பு ஊடகங்களுக்கு இன்றைய தினம்(14) தெரிவித்துள்ளார்.