அரசாங்கம் அடைந்துள்ள இலக்குகளை ஜெனிவாவில் விவரிக்கும் பிரதியமைச்சர்

Report Print Ajith Ajith in அரசியல்

கடந்த 2015 ஜனவரி 8ஆம் திகதியின் பின்னர் இலங்கை அரசாங்கம் அடைந்துள்ள இலக்குகள் தொடர்பில் ஜெனிவாவில் விளக்கமளிக்க உள்ளதாக பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஜெனிவாவில் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் சர்வதேச பருவகால மீளாய்வு கூட்டத்தொடரில் நாளைய தினம்(15) இலங்கை குறித்து ஆராயப்பட உள்ளது.

இந்த நிலையில், குறித்த கூட்டத்தில் பங்கேற்கும் இலங்கை குழுவுக்கு பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தலைமை ஏற்றுள்ளார்.

குறித்த குழுவினர் இன்று ஜெனிவா சென்றுள்ளனர். இந்த நிலையில், தமது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.