ஐதேகவுக்கு பொறி வைக்கும் மைத்திரிக்கு சிக்கல்!

Report Print Samy in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சிறப்புச் சந்திப்பொன்று விரைவில் நடைபெறவுள்ளது.

மகிந்த ஆட்சியின் போது இடம்பெற்ற ஊழல், மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்குத் தனித்தனி ஆணைக்குழு அமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வரும் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், இது தொடர்பில் பேச்சு நடத்துவதற்கு நேரம் வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோரியிருந்தனர்.

இதற்கமையவே அடுத்த வாரமளவில் இந்தச் சந்திப்பு இடம்பெறும் என்று அறியமுடிகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிறிலங்கா சுதந்திரக் கட்சியைக் கடுமையாக விமர்சிக் கின்றனர் என்று, சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் அண்மையில் முறையிட்டிருந்தனர்.

இது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ஜனாதிபதி மைத்திரி விளக்கம் கோரவுள்ளார் எனத் தெரியவருகின்றது.

பிணைமுறி விவகாரத்தைக் கையிலெடுத்து ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடும் நெருக்கடி கொடுத்து வரும் நிலையிலேயே, கடந்த ஆட்சியின் போது இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் ஆராய வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரவுள்ளனர்.

கூட்டு அரசிலுள்ள சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் சிலரைக் குறிவைத்தே விசாரணை கோரப்படவுள்ளது எனவும் அறியமுடிகின்றது.

newuthayan