ஐரோப்பிய நாடுகளில் உள்ள இலங்கையர்களின் சாட்சியம் தொடர்பில் துரித விசாரணை: போல் ஸ்கல்லி

Report Print Shalini in அரசியல்

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் சித்திரவதைகள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தமிழர்களுக்கான அனைத்து கட்சி நாடாளுமன்றக் குழுவின் தலைவர் போல் ஸ்கல்லி வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் 50க்கும் மேற்பட்ட தமிழர்கள் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாக, எசோசியேட் ப்ரஸ் நடத்திய ஆய்வின் போது தெரியவந்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் அரசியல் தஞ்சம் கோரியுள்ள இலங்கையர்கள் இதில் சாட்சியமளித்திருந்தனர்.

இந்த குற்றச்சாட்டு குறித்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை விசாரணை நடத்த வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.