மகிந்த - மைத்திரி சந்திப்பு குறித்து நாமல் வெளியிட்ட தகவல்!

Report Print Murali Murali in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆகியோருக்கு இடையில் சந்திப்பு எதுவும் இடம்பெறவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்விலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆகியோருக்கு இடையில், சந்திப்பொன்று அண்மையில் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற நிலையில், நாமல் ராஜபக்ச இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கும் இடையில் சந்திப்பு நடைபெறுமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இச்சந்திப்பு இடம்பெறாது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகிந்த - மைத்திரியை இணைக்கும் நோக்கில் சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சிலர் கடும் முயற்சி எடுத்து வருகின்றனர்.

எனினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மகிந்த ராஜபக்சவை சந்திக்க தயாராக இல்லை எனத் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.