கலப்பு நீதிமன்ற முறையை இலங்கை அரசாங்கம் நிராகரித்தது!

Report Print Kamel Kamel in அரசியல்

இலங்கை அரசாங்கப் படையினருக்கு எதிரான போர்க்குற்றச் செயல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்துவதனை சர்வதேச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் கால மீளாய்வு மாநாட்டில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்பில் கலப்பு நீதிமன்றம் அமைத்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென கோரப்பட்டிருந்தது.

கனடா, எஸ்டோனியா, கோதமாலா மற்றும் லட்விய ஆகிய நாடுகள் இந்தக் கோரிக்கையை முன்வைத்திருந்தன.

இந்த மாநாட்டில் இலங்கையினால் நிறைவேற்றப்பட வேண்டுமென 230 பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இந்தப் பரிந்துரைகளில் 177 ஐ இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது.

இராணுவப் படையினருக்கு சொந்தமான சகல சுற்றுலா விடுதிகளும் மூடப்பட வேண்டுமென சுவிட்சர்லாந்து பரிந்துரை செய்திருந்தது.