பிரதமரின் உத்தியோகபூர்வ தொலைபேசி தகவல்கள் கசிந்தமை தொடர்பில் விசாரணை

Report Print Kamel Kamel in அரசியல்
118Shares

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் உத்தியோகபூர்வ தொலைபேசித் தகவல்கள் கசிந்தமை குறித்து விசாரணைகள் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த வகையில், பிரதமரின் தொலைபேசி உரையாடல் விபரங்கள் வெளியாருக்கு எவ்வாறு சென்றது என்பது தொடர்பில் இந்த விசாரணையின் போது ஆராயப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

பிரதமரின் தொலைபேசி உரையாடல்கள் வெளிநபர்களின் கைகளுக்கு செல்வது தேசியப் பாதுகாப்பு தொடர்பான பாரிய சிக்கல்களை உருவாக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சட்ட மா அதிபர் திணைக்களத்தின் உத்தரவிற்கமைய பிரதமர் உள்ளிட்டவர்களின் தொலைபேசி உரையாடல் விபரங்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தகவல்களை திரட்டியதாக ஜனாதிபதி ஆணைக்குழுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பிரதமரது உத்தியோகபூர்வ தொலைபேசி விபரங்கள் வேறு நபர்களினால் எவ்வாறு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தப்படவுள்ளது.