புதிய மேல் நீதிமன்றின் முதல் வழக்காக பிணை முறி மோசடி சம்பவம்?

Report Print Kamel Kamel in அரசியல்

புதிதாக உருவாக்கப்படும் மேல் நீதிமன்றின் முதல் வழக்காக மத்திய வங்கி பிணை முறி மோசடி சம்பவம் தொடர்பிலான விசாரணை நடத்தப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்றைய தினம் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஊழல், மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு மூன்று நீதிபதிகளைக் கொண்ட மேல் நீதிமன்றமொன்று உருவாக்க வரவு செலவுத் திட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் பூர்த்தியாகும் வரையில் காத்திருந்து நீதிமன்ற விசாரணை நடத்த வேண்டியதில்லை.

கோப் குழுவின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு சட்ட மா அதிபரினால் வழக்குத் தொடர முடியும். இந்த சவாலை முடிந்தால் நீதி அமைச்சர் தலதா அதுகோரல ஏற்றுக்கொள்ளட்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.