தேசியக் கொடி தொடர்பில் த.தே.கூ அதிருப்தி: சுமந்திரன் தெரிவிப்பு

Report Print Sujitha Sri in அரசியல்

தேசியக் கொடி தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் அதிருப்தி உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் வட மாகாண கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன் தேசிய கொடியை ஏற்ற மறுப்பு தெரிவித்தமை தொடர்பில் ஊடகமொன்றிட்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில், தேசியக் கொடி தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு அதிருப்தி உள்ளது. இருப்பினும் கூட தேசியக் கொடிக்கான உரிய மரியாதை கொடுக்கப்பட வேண்டும்.

அத்துடன் தேசியக் கொடிக்கு தமது அதிருப்தியை காட்டி சிலர் போலியான தேசியவாதத்தை வெளிப்படுத்த முயல்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.