ஜனாதிபதியின் மீது கடும் எதிர்ப்பை காட்டும் சுஜீவ

Report Print Ajith Ajith in அரசியல்

மத்திய வங்கியின் முறிவிற்பனை விடயத்துக்கு மாத்திரம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை அமைத்துள்ளதாகவும், மிக் விமானக்கொள்வனவு, கப்பல் கொள்வனவு உட்பட்ட விடயங்களுக்கு ஜனாதிபதி ஆணைக்குழுக்களை நியமிக்காமை குறித்து தாம் கடும் அதிருப்தி கொண்டிருப்பதாகவும் பிரதி அமைச்சர் சுஜீவ சேனசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்

கொழும்பில் இன்றைய தினம்(21) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது அவர் இதனை தெரிவித்துள்ளார். இது ஐக்கிய தேசியக்கட்சிக்கு எதிரான சதித்திட்டம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தாம் அர்ஜூன் அலோசியஸூடன் முறி தொடர்பான நூல் ஒன்றை எழுதுவதற்காகவே தொடர்புகொண்டதாக அவர் குறிப்பிட்டார்.

எனினும், தாம் அவருடன் விற்பனை தொடர்பை கொண்டிருந்ததாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளமையை அவர் மறுத்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த அரசாங்கத்தின் பாரிய ஊழல்கள் தொடர்பில் விசாரணை ஆணைக்குழுக்கள் அமைக்கப்படாமை தொடர்பில் தாம் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாகவும் சுஜீவ எச்சரித்துள்ளார்.

Latest Offers