தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்?

Report Print Rakesh in அரசியல்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் உத்தியோகபூர்வ கைத்தொலைபேசி அழைப்பின் பதிவுகள் மற்றுமொரு தரப்பின் கைகளில் கிடைத்தமையானது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

எனவே, நாட்டின் பிரதமரது உத்தியோகபூர்வ கடமைகளுக்காக பாவனை செய்யப்படும் தொலைபேசி அழைப்புகளில் பதிவுசெய்யப்பட்ட தரவுகள் மற்றுமொரு தரப்பினருக்குச் செல்வதால் எத்தகைய அச்சுறுத்தலான நிலைமை தோன்றும் என்ற கோணத்திலேயே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சட்டமா அதிபர் திணைக்களத்தின் பணிப்புரையின் பிரகாரம் பிரதமரின் கைத்தொலைபேசி உரையாடல்களை மற்றுமொரு தரப்பினர் ஆராய்ந்துள்ளனர் என்பதும் மத்திய வங்கி பிணைமுறி மோசடியின் விசாரணைகளுக்காக இந்த அழைப்புகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது என்றும் தெரியவந்துள்ளது.

எனவே, இது குறித்து விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.