மஹிந்த அரசாங்கம் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்டது!

Report Print Kamel Kamel in அரசியல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக அமைச்சர் நவீன் திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தில் அங்கம் வகித்த அமைச்சர்களில் ஒருவர் என்ற வகையில், தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பட்டமை எனக்குத் தெரியும்.

சட்டத்தேவைகளின் அடிப்படையில் மட்டுமே தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்க முடியும். அவ்வாறு இல்லையென்றால் அது தனி மனித உரிமைகளை மீறும் செயலாகும் என அமைச்சர் திஸாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.