மகிந்த குடும்பத்தை குறி வைக்கும் நல்லாட்சி! இன்னும் சில நாட்களில் கோட்டா கைது?

Report Print Nivetha in அரசியல்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்சவை நல்லாட்சி அரசாங்கம் இன்னும் சில நாட்களில் கைதுசெய்ய தயாராவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்றைய தினம்(21) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் அரசியல்வாதிகள் முதல் தொழிற்சங்கத்தவர் எனப் பலரும் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.

13, 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறைக்குச் சென்றுள்ளனர். அவர்களில் சிலர் இரண்டு மூன்று தடவைகள் சிறைக்குச் சென்றுள்ளனர்.

இந்த நிலையில், தாமும், தமது குடும்ப அங்கத்தவர்களும்தான் இந்த அராசங்கத்தின் முதலாவது இலக்காகும் என மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.

அரசியலமைப்புக்கு எதிராக எலிய என்ற அமைப்பின் ஊடாக அவர், நாடு முழுவதும் மேற்கொள்ளும் பிரசாரங்களை முடக்க அவரை கைதுசெய்வதே ஒரே வழியாகும்.

எனவே, இன்னும் சில நாட்களில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச கைதுசெய்யப்பட உள்ளதாக மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.